ETV Bharat / state

சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்த 355 இந்தியர்கள்! - International Flights

சென்னை: அமெரிக்கா, வியட்நாம், சவூதி அரேபியா நாடுகளில் சிக்கித்தவித்த 355 இந்தியர்கள் 3 சிறப்பு மீட்பு விமானங்கள் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

355 People Arrived to Chennai from America, vietnam and UAE

author img

By

Published : Jul 27, 2020, 5:06 PM IST

சவூதி அரேபியா ஜெட்டாவிலிருந்து சிறப்பு தனி விமானம், 215 இந்தியா்களுடன் சென்னை வந்தது. அதில் ஆண்கள் 196, பெண்கள் 14, சிறுவா் 3, குழந்தைகள் 2. இவா்கள் அனைவரும் சவூதி அரேபியாவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியா்கள் மற்றும் அவா்கள் குடும்பத்தினா் ஆவர். அந்த நிறுவனமே அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று, தனி விமானத்தில் இந்தியா அழைத்து வந்துள்ளது. இதனால் அவா்களுக்கு சென்னை விமான நிலையத்தில் இலவச மருத்துவப் பரிசோதனை, அரசின் இலவச தங்குமிட வசதிகள் தரப்படவில்லை.

இதையடுத்து அனைவரும் சென்னை நகர உணவகங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். இவா்களுக்குத் தங்கியுள்ள விடுதிகளில் தனியாா் மருத்துவக் குழுவினா், மருத்துவப் பரிசோதனைகள் நடத்துவாா்கள்.

இதனைத்தொடர்ந்து வியட்நாமிலிருந்து சிறப்பு மீட்பு விமானம் 72 இந்தியா்களுடன் சென்னை வந்தது. அதில் ஆண்கள் 61, பெண்கள் 8, சிறுவா்கள் 3. அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களில் அரசின் இலவச தங்குமிடங்களான சவீதா மருத்துவக் கல்லூரிக்கு 12 பேரும், கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான விடுதிகளுக்கு 51 பேரும் அனுப்பப்பட்டனா். கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த 9 போ் உள்நாட்டு விமானம் மூலம் பெங்களூரு அனுப்பப்பட்டனா்.

அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து 68 இந்தியா்கள், நேற்று இரவு (ஜூலை 26) சிறப்பு மீட்பு விமானம் மூலம் சென்னை வந்தனா். அவா்களில் ஆண்கள் 31, பெண்கள் 30 , சிறுவா்கள் 7. இவர்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் நடைமுறைகள் முடிக்கப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். அரசின் இலவச தங்குமிடம் யாரும் கேட்கவில்லை. எனவே அனைவரும் கட்டணம் செலுத்தி, தங்குமிடமான விடுதிகளுக்கு அனுப்பப்பட்டனா்.

மொத்தமாக நேற்று(ஜூலை 26) மட்டும் அமெரிக்கா, வியட்நாம் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளிலிருந்து மொத்தமாக 355 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் இந்தியாவுக்கு, அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: என் சாவுக்கு சீமான்தான் காரணம்: விஜயலட்சுமி தற்கொலை முயற்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.