ETV Bharat / state

ஒரு மாதத்தில் ரூ.31.12 கோடி வரி வசூல் - வணிகவரித்துறை

நான்கு வாரங்களில் தமிழ்நாட்டில் வணிகவரித்துறையின் நுண்ணறிவுப் பிரிவுகள் மூலம் 1149 இனங்களில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்நடவடிக்கைகள் மூலம் ரூ.31.12 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என வணிகவரித்துறை தெரிவித்துள்ளது.

ஒரு மாதத்தில் ரூ.31.12 கோடி வரிப்பணம் வசூல் - வணிகவரித்துறை

author img

By

Published : Mar 8, 2022, 7:55 AM IST

சென்னை: ஒன்றிய அரசால் ஜுலை 2017 முதல் சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்துவதில் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மூலம் பெறப்படும் வரி வசூல் முக்கிய பங்குப் வகிக்கிறது.

வணிகவரித்துறையின் புலனாய்வு சார்ந்த நடவடிக்கைகளை வலுவாக்குவது, நுண்ணறிவு பிரிவுகள் மூலம் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மீதான தணிக்கை பணியினை திறம்பட மேற்கொள்வது போன்ற பல புதிய முயற்சிகள் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி 17.01.2022 முதல் 13.02.2022 வரையில் முடிவடைந்த நான்கு வாரங்களில் தமிழ்நாட்டில் வணிகவரித்துறையின் நுண்ணறிவுப் பிரிவுகள் மூலம் 1149 இனங்களில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது மற்றும் இந்நடவடிக்கைகள் மூலம் ரூ.31.12 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:துரை வைகோவிற்கு முடிசூட்டு விழா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.