இதுதொடர்பாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ், "வீட்டுக் கண்காணிப்பில் 28 ஆயிரத்து 711 பேரும், அரசுக் கண்காணிப்பில் 135 பேரும் உள்ளனர். இவர்களில் இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 31 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தமாக 1204 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கரூரில் இன்று ஏற்பட்ட உயிரிழப்பையும் சேர்த்து 12 பேர் இதுவரை தமிழ்நாட்டில் உயிரிழந்துள்ளனர். இதுவரை கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிலிருந்து 28 நாள்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 81 பேர் வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் மார்ச் 9ஆம் தேதிக்குப் பிறகே கரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டதால், மற்ற மாநிலங்களைவிட குறைவான எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 19 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளன" என்றார்.
இதையும் படிங்க...மாணவர்களால் நிரம்பி வழியும் அரசு ஆன்லைன் கல்வி இணையதளங்கள்!