ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல்! - தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயிலிருந்து சென்னைக்கு வந்த மீட்பு விமானத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட 1.85 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல்செய்தனர்.

தங்கம்
தங்கம்
author img

By

Published : Nov 10, 2020, 7:44 PM IST

துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு இன்று (நவ. 10) ஏமரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு மீட்பு விமானம் வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத் துறையினா் சோதனை செய்தனர். அப்போது ஆந்திரா, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, சென்னையைச் சோ்ந்த 11 மீட்பு பயணிகள் மீது சுங்கத் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவா்களை நிறுத்தி விசாரித்த போது, மாற்றிமாற்றி பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் சந்தேகம் வலுத்த நிலையில், அவா்கள் அனைவரையும் தனித்தனி அறைகளுக்கு அழைத்துச் சென்று முழுமையாக சோதித்தனா். அப்போது அவா்களின் உள்ளாடைகள் மற்றும் ஆசனவாய்களுக்குள் தங்கக் கட்டிகள், தங்க பேஸ்ட்கள், தங்க கைச் செயின்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவா்களிடமிருந்து மொத்தம் 3.5 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினா் பறிமுதல்செய்தனா். அதன் சா்வதேச மதிப்பு 1.85 கோடி ரூபாய் ஆகும். பிறகு தங்கம் கடத்திவந்த 11 பேரையும் சுங்கத் துறையினா் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: குளிர்சாதன பொருள் உதிரிபாகங்கள் கிடங்கில் தீ விபத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.