ETV Bharat / state

முதலமைச்சர் குறித்து இழிபேச்சு: ஆ.ராசா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு - மத்திய குற்றப்பிரிவு காவல் துறை

சென்னை: முதலமைச்சர் குறித்து இழிவாக பேசியதாக திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறை 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

DMK MP Rasa
ஆ.ராசா
author img

By

Published : Mar 28, 2021, 3:55 PM IST

சென்னையில் அமைந்தகரை தனியார் வளாகம் சந்திப்பு அருகில், காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலும், தேர்தல் பறக்கும் படையினரும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மகேஷ்குமார் அகர்வால், "தேர்தல் பணிக்காக 231 பறக்கும் படையினர் தொடர்ந்து வாகன சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரையிலும் 7.5 கோடி பணம், 46 கிலோ தங்கம், 107 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மதுபானங்களைச் சோதனை செய்வதற்குத் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1000 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 107 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 350 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2000 ரவுடிகளை தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகிறோம். நேற்று மட்டும் 19 ரவுடிகளை கைது செய்துள்ளோம்.

ஆ. ராசா மீது தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சென்னை காவல் துறைக்கு வந்துள்ளது. ஆ.ராசா மீது தேர்தல் நடத்தை விதிமுறை மீறல், ஆபாசமாகப் பேசுதல், கலகம் செய்யத் தூண்டுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாள்களில் 1000 காவலர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளன.

ஆலந்தூர் அதிமுக வேட்பாளர் வளர்மதியின் மகன் பணம் பட்டுவாடா செய்தது தொடர்பாக பரங்கிமலை காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக, கரோனா தொற்று அதிகரித்து வருவதால், மக்கள் கரோனா விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சேலத்தில் ஆ.ராசாவின் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.