தமிழ்நாட்டில் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. மாநிலம் முழுவதும் 27 மாவட்டங்களில் நடைபெற்றும் வரும் வாக்குப்பதிவில் காலை 11 மணி நிலவரப்படி 28.81 விழுக்காடு வாக்கு பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பதற்றமான வாக்குச்சாவடிகள், பிரச்னைக்குரிய வாக்கு மையங்கள் ஆகியவை கண்டறியப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. அதற்கு இணைய இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்திலிருந்து ஆணையர் பழனிசாமி கண்காணித்துவருகிறார்.
வெப் ஸ்ட்ரீமிங் எனப்படும் இணைய இணைப்புகள் 1,551 வாக்குச்சாவடிகளில் பொறுத்தப்பட்டு கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இத்தேர்தலில் 4,924 ஊராட்சிமன்றத் தலைவர், 2,544 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 255 மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் ஆகிய பதவியிடங்களுக்கான மக்கள் பிரதிநிதிகளை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர். முன்னதாக, முதல்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற்றது.
இதையும் படிங்க: மாநில நிர்வாகப் பட்டியல்: முன்னாள், இந்நாள் முதலமைச்சர்கள் மோதல்!