ETV Bharat / state

சூதாட்டத்தில் சிக்கிய ரூ.9.50 லட்சம் - போலீசார் விசாரணை - பட்டினப்பாக்கம் காவல்துறை விசாரணை

சென்னை: எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் குடியிருப்பில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 28 பேரை பட்டினப்பாக்கம் காவல்துறையினர் கைது செய்தனர்.

9 lakhs
9 lakhs
author img

By

Published : Aug 14, 2020, 10:24 PM IST

சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள கற்பகம் அவென்யூவில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக பட்டினம்பாக்கம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் நேற்றிரவு (ஆக.14) அதிரடி சோதனை நடத்தினர்.

இதில், 28 நபர்கள் சேர்ந்து சுமார் ரூ. 9.50 லட்சம் வைத்து சூதாட்டம் விளையாடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 28 பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதன் பின் கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 26 பேரில், இருவர் அதிமுக நிர்வாகிகள் என்பது தெரியவந்தது. அதில், செங்கல்பட்டு மாவட்டம் அதிமுக நிர்வாகி என்பதும் மாதவரத்தை சேர்ந்த அதிமுக அம்மா பேரவை நிர்வாகி என்பதும் தெரியவந்தது.

சூதாட்டத்தில் சிக்கிய பணம்
சூதாட்டத்தில் சிக்கிய பணம்

இதில், மகேந்திரன், கோபி ஆகிய இருவரும் சூதாட்டம் நடத்த காரணமானவர்கள் ஆவர். மீதம் உள்ள 26 பேர் மீதும் சூதாட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல் நிலைய பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: திமுகவிலேயே பவர் இல்லாத ஸ்டாலினுக்கு மக்களிடம் எப்படி பவர் ஏற்படும்? - முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.