சென்னை: தமிழ்நாட்டில் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து வந்த மூன்று நபர்களுக்கும் பங்களாதேஷில் இருந்து வந்த ஒருவருக்கும் உட்பட 2,722 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் ஜூலை 8ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விபர தகவலில் படி: தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 31 ஆயிரத்து 810 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனால் தமிழ்நாட்டில் இருந்த 2,718 நபர்களுக்கும், ஐக்கிய அரபு நாட்டிலிருந்து வந்த மூன்று நபர்களுக்கும் பங்களாதேஷ் நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கும் என 2,722 நபர்களுக்கு மேலும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி 62 லட்சத்து 15 ஆயிரத்து 166 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் 34 லட்சத்து 96 ஆயிரத்து 321 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரிய வந்தது.
அவர்களின் தற்பொழுது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 18 ஆயிரத்து 687 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 2,413 பேர் சிகிச்சையில் இருந்து குணம் அடைந்து உள்ளனர்.
மேலும் சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆயிரத்திற்கு மேல் பதிவாகி வந்த பாதிப்பு சற்று குறைந்து 939 என பதிவாகியுள்ளது செங்கல்பட்டில் 474 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 131 நபர்களுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 191 நபர்களுக்கும், என பாதிப்பு அதிக அளவில் உள்ளது.தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது.
பரிசோதனை செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையில் மாநில அளவில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 8.5 சதவீதமாக இருக்கிறது. ஆனால் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 17.7% பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 17.4 சதவீதம் பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனையில் உள்ள படுக்கைகளிலும் நோயாளிகள் அதிக அளவில் சேர்ந்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் புதிதாக 2,662 பேருக்கு கரோனா உறுதி