சென்னை: தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 2,662 பேருக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற 77 வயது மூதாட்டி சிகிச்சைப் பலனின்றி கரோனா தொற்றுக்கு இறந்துள்ளார்.
பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் இன்று (ஜூலை 05) வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 26,188 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மாலத்தீவு மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து வந்த தலா ஒரு நபர்களுக்கும் தமிழ்நாட்டில் இருந்த 2,658 நபர்களுக்கும் என 2,662 நபர்களுக்கு மேலும் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி 61 லட்சத்து 21 ஆயிரத்து 150 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 34,88,091 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்துள்ளது.
அவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 16,765 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் சிகிச்சைப் பெற்று நோயாளிகளில் 1,512 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிக்கப்பட்டவர்கள் இறப்பு என்பது இல்லாத நிலை தொடர்ந்து நீடித்து வந்தது. இந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற 77 வயது மூதாட்டி ஒருவர் இணை நோய் தொற்று இருந்ததால் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் 1,060 நபர்களுக்கும் செங்கல்பட்டில் 373 நபர்களுக்கும் கோயம்புத்தூரில் 137 நபர்களுக்கும் திருவள்ளூரில் 132 நபர்களுக்கும் திருச்சியில் 112 நபர்களுக்கும் என 2,662 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நோய்த்தொற்று அனைத்து மாவட்டங்களிலும் பரவி வருவதால் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதையும் படிங்க:தமிழகத்தில் மேலும் 2385 பேருக்கு கரோனா பாதிப்பு!