திருவள்ளூர்: ஆவடியை அடுத்த அயப்பாக்கத்தில் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக, திரையிடும் மையம் கொண்ட (ஸ்கிரீன்ங் சென்டர்), கரோனா தொற்று சிறப்பு மருத்துவ சிகிச்சை மையம் ஒன்றாக அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 165 படுக்கை வசதிகளோடு அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில், 60 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், திமுக எம்.பி., டி.ஆர்.பாலு, பால்வளத்துறை அமைச்சர்.சா.மு.நாசர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், ’திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்கு 847 படுக்கைகள் காலியாக உள்ளன. ஜூன் மாதத்திற்கு 42 லட்சம் தடுப்பூசிகள் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இதுவரை 518 பேருக்கு கறுப்பு பூஞ்சை நோய்த்தொற்று வந்துள்ளது. 150 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நோய்த்தொற்று இருந்துள்ளது. இது குறித்து ஆராய 13 மருத்துவ வல்லுநர்களை நியமித்து ஆய்வு செய்து வருகிறோம். இன்னும் ஒரு சில வாரங்களில் கரோனா தொற்று முற்றிலுமாக இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்” என்றார்.
இதையும் படிங்க:போலி ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி 80 ஆயிரம் ரூபாய் மோசடி: நகராட்சி சுகாதார ஆய்வாளர் புகார்