ETV Bharat / state

2021 சட்டப்பேரவை தேர்தல்: பரப்புரையை தீவிரப்படுத்தவுள்ள காங்கிரஸ்...!

சென்னை: 2021-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரையை காங்கிரஸ் கட்சி தீவிரப்படுத்தவுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் செய்தியாளர் சந்திப்பு

author img

By

Published : Dec 2, 2020, 6:38 PM IST

2021இல் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்று (டிச. 2) திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

அதற்காக சென்னை வந்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், “வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராகுல்காந்தி பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் போராட்டத்தை தொடங்கினார். இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். வேளாண் சட்டத்தை எதிர்த்து திமுக, கம்யூனிஸ்டு கட்சிகள், சிவசேனா உள்பட எதிர்க்கட்சிகள் போராடியது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் செய்தியாளர் சந்திப்பு

இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது. மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றில் உரிய விவாதங்கள் செய்யாமல் ஜனநாயக முறையில் இல்லாமல் சட்டங்களை பாஜக நிறைவேற்றியது.

விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசிக்காமல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திய போது மத்திய அரசு காது கொடுத்து கேட்கவில்லை. டெல்லியை விவசாயிகள் சுற்றி வளைத்து உள்ளனர். டெல்லிக்கு செல்ல கூடிய 4 முக்கிய சாலைகள் மறிக்கப்பட்டு உள்ளது.

போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளதால் சரக்குகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. விவசாயிகளின் கோரிக்கை ஏற்காத வரை போராட்டம் ஒயாது. காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தேர்தல் பரப்புரையை தொடங்கி விட்டது. பரப்புரையை தீவிரப்படுத்துவது குறித்து கட்சியினருடன் ஆலோசித்து அறிவிக்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க...புரெவி புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த அமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.