சென்னை: 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது என்று அறிவித்த தனி நீதிபதியின் தீர்ப்பை வழங்கியிருந்தார். இதை எதிர்த்து தென்னிந்திய நடிகர் சங்கம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் மீதான இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கை நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அமர்வு விசாரித்தது. மனுதாரர் ஏழுமலை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜேஷ், நடிகர் சங்க தேர்தல் நடத்தபட்டதில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததாகவும், சங்க உறுப்பினர்களின் இறுதி பட்டியலை உறுதிபடுத்தவில்லை என்று கூறினார்.
மேலும் அவர், சென்னை மாவட்ட பதிவாளர் தயார் செய்த உறுப்பினர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் வேண்டும் என தெரிவித்தாக வாதிட்டார். எனவே நடிகர் சங்க உறுப்பினர்களின் பட்டியலை இறுதி செய்து புதிதாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க: அதிமுகவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் சசிகலா? ஒருவார காலம் சுற்றுப்பயணம் தொடக்கம்!