ETV Bharat / state

எமா்ஜென்சி விளக்கில் மறைத்து கடத்திவந்த ரூ.1.18 கோடி மதிப்புடைய 2.39 கிலோ தங்கம்!

author img

By

Published : May 17, 2021, 10:29 PM IST

எமர்ஜென்சி விளக்கில் மறைத்து வைத்து சென்னைக்கு ரூ. 1.18 கோடி ரூபாய் மதிப்புடைய 2.39 கிலோ தங்கத்தை கடத்தி வந்தவரை சென்னை வருவாய் சுங்கத்துறையினர் கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

2-dot-39-kg-smuggling-gold-seized-in-chennai-airport
எமா்ஜென்சி விளக்கில் மறைத்து கடத்திவந்த ரூ.1.18 கோடி மதிப்புடைய 2.39 கிலோ தங்கம்!

சென்னை: சாா்ஜாவிலிருந்து இன்று அதிகாலை சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு வந்த சிறப்பு ஏா் அரேபியா விமானத்தில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய்ப் புலனாய்வு துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவா்கள் சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு அவசரமாகத் தகவல் கொடுத்தனா்.

உடனடியாக விமான நிலைய சுங்கத்துறையினா் ஏா் அரேபியா விமானத்தில் வந்த 92 பயணிகளையும், அவா்களது உடைமைகளையும் தீவிரமாக கண்காணித்து சோதனையிட்டனா். அப்போது, கா்நாடகா மாநிலம், மங்களூரைச் சோ்ந்த பயணி முகமது அராபத்(24) என்பவா் கொண்டுவந்திருந்த எமா்ஜென்சி விளக்கு மீது அலுவலர்களுக்குச் சந்தேகம் ஏற்படத் தீவிரமாக அதனை சோதனையிட்டனர். அதில், 18 தங்கக்கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை சுங்கத்துறையினர் கண்டுபிடித்தனா்.

எமா்ஜென்சி விளக்கில் மறைத்து கடத்திவந்த ரூ.1.18 கோடி மதிப்புடைய 2.39 கிலோ தங்கம்

18 தங்கக் கட்டிகளின் எடை 2.39 கிலோ. இதன் மதிப்பு ரூ.1.18 கோடி. முகமது அராபத் மீது வழக்குப் பதிவு செய்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில் இவர் தங்கம் கடத்தும் சர்வதேச கும்பலைச் சேர்ந்தவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படிங்க: 1.8 கிலோ தங்கத்தை பேண்டெய்டில் மறைத்து கடத்தல்: இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.