சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர், தீயணைப்புத் துறை காவலர்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள 3,552 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த நவம்பர் 27ஆம் தேதி அன்று நடைபெற்றது. இதற்காக 3,66,727 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட 35 மாவட்டங்களில் இருந்து 295 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 2,99,758 பேர் தேர்வு எழுதினார்கள். சென்னையைப் பொறுத்தவரை கே.கே. நகர், ராமாபுரம், கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், வேளச்சேரி, அமைந்தகரை உள்ளிட்டப் பல்வேறு இடங்களில் தனியார் கல்லூரிகள் என 16 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில் தமிழ்வழி தேர்வில் 2,01,718 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழ்வழி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொது அறிவு தேர்வானது நடைபெற்றது. அதில் 1,98,266 பேர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் தகுதியின் அடிப்படையில் 18,671 பேர் மட்டுமே உடற்திறன் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதில் 15,158 பேர் ஆண்கள் என்றும், 3,513 பேர் பெண்கள் என காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருப்பதிக்கு ரூ.70 லட்சம் மதிப்புள்ள சொத்தை வழங்கிய திருவள்ளூர் செவிலியர்