சென்னை: தமிழ்நாட்டில் 18 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை ஆட்சியராக இருந்த சீதாலட்சுமி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறப்பு செயலாக்கத்துறையின் முதன்மை செயலாளராக, விபு நாயரை நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தென்காசி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக கோபால் சுந்தரராஜ், ராமநாதபுரத்திற்கு புதிய ஆட்சியராக சந்திரகலா ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
விருதுநகர் ஆட்சியராக இருந்த கண்ணன், இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் ஆட்சியராக இருந்த மகேஸ்வரி வேளாண் மற்றும் உழவர்நலத்துறை இணைச் செயலாளராக நியமனம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: கரூர் மாவட்ட புதிய ஆட்சியராக பிரபுசங்கர் நியமனம்