சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில் தனியார் உணவு விடுதியுடன் சேர்ந்து மதுபான பார் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பாரில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக தாம்பரம் உளவுத்துறை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் தாம்பரம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஆல்பின் ராஜ் தலைமையிலான காவல் துறையினர், மதுபான பாரில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
சோதனையில், அங்கு பணம் வைத்து சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து, தமிழ் மணி, ரங்கா, ரவிகுமார், பிரவின், கோதண்டன், வெங்கட் உள்ளிட்ட 15 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம், 20 சீட்டுக் கட்டுகள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஐபிஎல் சூதாட்டம் : மூன்று பேர் கைது!