ETV Bharat / state

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி மோசடி செய்த 15 பேர் கைது

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி போலி ஆவணங்களை சமர்பித்து இந்திய அரசு நிதி நிறுவனத்திடம் இருந்து 12 கோடி ரூபாய் மோசடி செய்த சென்னையை சேர்ந்த தம்பதி உள்பட 15 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி மோசடி செய்த 15 பேர் கைது

author img

By

Published : Feb 5, 2022, 1:43 PM IST

சென்னை: தியாகராயநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீப்ரியா, இவரது கணவர் ஸ்ரீகாந்த். கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீபிரியா இந்திய தொழில் நிதி நிறுவனத்தை அணுகி பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்காக ரூ.5 கோடி கடனாக பெற்றுள்ளார்.

இதனையடுத்து ஸ்திதி என்கிற தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கும் ரூ.5 கோடி பணம் தேவைப்படுவதாக அதன் பெயரைக் கூறி மேலும் ரூ.5 கோடி ஸ்ரீபிரியா பெற்றுள்ளார்.

கடன்

ஸ்ரீபிரியா பெற்ற ரூ.10 கோடி கடனை திருப்பி செலுத்தாததால் இந்திய நிதி நிறுவனம் ஸ்ரீப்ரியா மீது நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொண்ட போது, ஸ்ரீபிரியா சைலாக் டெக்னாலஜிஸ் என்கிற வேறொரு தனியார் மென்பொருள் நிதி நிறுவனத்திடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இந்த மென்பொருள் நிறுவனம் ஆண்டிற்கு 1200 கோடி ரூபாய் வரை தொழில் செய்து வருவதாகவும், இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு 900 கோடி ரூபாய் எனவும் கூறி, இந்த நிறுவனம் தான் பெற்ற கடனுக்கு பொறுப்பு ஏற்பார்கள் எனக் கூறி அந்த நிறுவனம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஸ்ரீபிரியா பெற்ற ரூ.10 கோடி பணத்திற்கு மைசூரில் உள்ள 12 கோடி ரூபாய் மதிப்பிலான 2 சொத்துக்களையும் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்து அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார்.

ஆனால் ஸ்ரீப்ரியா,பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி பெற்ற கடனையும், அதன் பிறகு பெற்ற ஐந்து கோடி ரூபாய் கடனையும் பல்வேறு சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தியுள்ளார் என்பதும் போலியான பங்குகளை உருவாக்கி பொதுமக்களிடம் விற்று மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

கூட்டு சேர்ந்து மோசடி

எனவே இந்திய தொழில் நிதி நிறுவனம் சார்பில் இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு கடந்த 2014-ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டு ஸ்ரீப்ரியா உள்ளிட்ட அவரது கணவர் ஸ்ரீகாந்த் மற்றும் போலி நிறுவனங்கள் சைலாக் டெக்னாலஜிஸ் மற்றும் ஸ்திதி தனியார் காப்பீட்டு நிறுவனம் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில்,வழக்கை சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் கடந்தாண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது. உத்தரவின்பேரில் சிபிஐ சென்னை மண்டல பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு அலுவலர்கள் முதற்கட்டமாக மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கோப்புகளைப் பெற்று முதல் கட்ட விசாரணையைத் தொடங்கினர்.

விசாரணையில் ஸ்திதி என்கிற தனியார் காப்பீட்டு நிறுவனம் சைலாக் டெக்னாலஜீஸ் ஆகிய நிறுவனங்களில் நிர்வாக இயக்குனர்களாக இருந்தவர்கள் ஸ்ரீபிரியா மற்றும் அவரது கணவர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து மோசடி செய்யும் நோக்கில் இந்திய அரசு நிறுவனத்தை ஏமாற்றி 10 கோடி ரூபாய் வரை கடனாகப் பெற்றது உறுதி செய்யப்பட்டது.

அனைத்தும் போலி ஆவணங்கள்

மேலும் ஸ்ரீபிரியா பெற்ற கடனுக்கு நிகராக சொத்துக்களை சமர்ப்பிப்பதாகக் கூறிய இரண்டு சொத்துகள், ஸ்ரீபிரியாவிற்கு சொந்தமான சொத்துகள் அல்ல அவை போலி ஆவணங்கள் தயாரித்து சமர்ப்பிக்கப்பட்டவை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

எனவே ஸ்ரீபிரியா இரண்டு நிறுவனங்கள் சார்பாக சமர்ப்பித்த ஆவணங்களை போலியாக தயாரித்த நபர்கள் , இரண்டு சொத்துகான போலி ஆவணங்களை தயார் செய்ய உதவியவர்கள், என 15 பேர் மீதும் சிபிஐ அலுவலர்கள் இன்று வழக்கு பதிவு செய்து அடுத்த கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க:ஜெர்மனிக்கு கடத்த முயன்ற ரூ.1கோடி மதிப்புடைய ராமர் சிலை பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.