சென்னை: கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: -
- தற்போது 17 தலைமை சங்கங்கள், 216 மத்திய சங்கங்கள் மற்றும் 22,690 தொடக்க சங்கங்கள் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் 14 செயல்பாட்டு பதிவாளர்களின் கீழ் துடிப்புடன் செயல்படுகிறது.
- தமிழ்நாட்டில் மொத்தம் 4453 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 151 கிளைகளுடன் 12,525 கிராம ஊராட்சிகளில் பரந்து விரிந்த கட்டமைப்புடன் செயல்பட்டு வருகின்றன.
- கடந்த மார்ச் 10 வரை தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியால் ரூபாய் 192.08 கோடி மதிப்பில் 2043 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்திற்கு ரூபாய் ஆயிரம் கோடி கடன் வசதியை வழங்கியுள்ளது.
- 2022-2023 காலங்களில் 17.05 லட்சம் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் ஆண்டு குறியீடாக சுமார் 12,000 கோடியை கடந்து ₹ 13,119. 12 கோடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
- இதனைத்தொடர்ந்து 2022-23 ஆம் ஆண்டில் ரூ 1799. 13 கோடி மதிப்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 2,77,036 விவசாயிகளுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 6203 விவசாயிகளுக்கு தானிய ஈட்டுக் கடனாக ரூபாய் 252.11 கோடி அளவிற்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.
- இதன் தொடர்ச்சியாக ரூபாய் 1505.36 கோடி 40,838 சுய உதவி குழுக்களுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக 5336 கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ரூபாய் 10.77 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூபாய் 65.30 கோடி கடன் பெற்று 14,209 மாற்றுத் திறனாளிகள் பயனடைந்துள்ளனர்.
- மேலும் கடந்த ஆண்டில் மட்டும் 3,36,229 விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் கூட்டுறவு சங்கம் வாயிலாக இணைந்த நிலையில் அவர்களிடம் வசூலிக்கப்பட்ட 20.60 கோடி காப்பீடு கட்டணம் அந்தந்த தொடர்புடைய காப்பீடு நிறுவனங்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
- மேலும் 2016- 17ஆம் ஆண்டு முதல் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுள் 28.02.2023 வரை 30,59,954 விவசாயிகளுக்கு ரூபாய் 6117.94 கோடி மகசூல் இழப்புக்கான இழப்பீட்டுத் தொகை கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
- மாநில அரசு இதுவரை ரூபாய் 4,818.88 கோடி மதிப்புள்ள பொது நகைக் கடனை தள்ளுபடி செய்துள்ளது. நகைக் கடன் தள்ளுபடி செய்யும் கோரிக்கைக்காக கூட்டுறவு நிறுவனங்களுக்கு அரசு இதுவரை ரூபாய் 2,215.58 கோடியை வழங்கி உள்ளது.
- இது மட்டுமின்றி மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் தொகை ரூபாய் 2755.99 கோடியை தள்ளுபடி செய்ததன் மூலம் 1,17,617 குழுக்களில் உள்ள 15,88,309 உறுப்பினர்கள் பயன் அடைந்துள்ளனர். இதற்காக கூட்டுறவு துறைக்கு அரசு இதுவரை 1200 கோடி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2022-23ஆம் ஆண்டில் மட்டும் ரூ1236.33 கோடி அளவிற்கு நகைக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர்த்து பண்ணை சாரா கடன்கள் என 2,23,553 உறுப்பினர்களுக்கு ரூபாய் 1648.74 கோடி கடனும், பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்கள் மூலம் ரூபாய் 10,583.76 கோடி மதிப்பில் 2,16,352 உறுப்பினர்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
- இதன் தொடர்ச்சியாக ஆதார விலை திட்டத்தின் கீழ் ரூபாய் 12.04 கோடிக்கு அரவை கொப்பரை 1083 மெட்ரிக் டன் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தாக்கல் செய்யப்பட்டது.
- இது ஒருபுறம் இருக்க 2022-23ஆம் ஆண்டுக்காண வேளாண் விளைபொருட்கள் 855.06 கோடி ரூபாய் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றும் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் மூலம் ரூபாய் 1159.74 கோடி அளவிற்கு வியாபாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- ரூபாய் 120.82 லட்சம் மதிப்பிலான விதைகள், ரூபாய் 1257.37 மதிப்பெண் உரக்கலவைகள் மற்றும் ரூபாய் 231.57 லட்சம் மதிப்பிலான வேளாண் கருவிகள் விவசாயிகளுக்கு விற்பனை செய்துள்ளது.
- இதன் வரிசையில் கூட்டுறவு சங்கங்கள் மாநில முழுவதும் 24,058 முழு நேர மற்றும் 9644 பகுதிநேர நியாய விலைக் கடைகளை நடத்தி வருகின்றனர். மேலும் அக்டோபர் 2021 முதல் பிப்ரவரி 2023 வரை நியாய விலை கடைகளில் ரூபாய் 102. 38 லட்சம் மதிப்பிலான பனைவெல்லம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
- இதுமட்டுமின்றி ஜூன் 2022 முதல் பிப்ரவரி 2023 வரை 26.4 லட்சம் மதிப்பிலான சிறு தானியங்களும் இதன் அடுத்தகட்டமாக அக்டோபர் 2022 முதல் பிப்ரவரி 2023 கால வரையில் ரூ6.23 லட்சத்திற்கு மதிப்புள்ள சிலிண்டர்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் தமிழ் நாட்டில் மொத்தம் 5743 நியாயவிலை கடைகளுக்கு மதிப்பு மிக்க ஐஎஸ்ஓ தர சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளன.
- இதுவரை 2965 நியாய விலைக் கடைகளில் நவீனமாக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு நிறைவடைந்துள்ள நிலையில், மாநில முழுவதும் மே 2021 முதல் பிப்ரவரி 2023 வரை 183 முழு நேர நியாய விலைக் கடைகள் மற்றும் 514 கடைகள் உட்பட மொத்தம் 697 நியாய விலைக் கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன.
- 2021-22 ஆம் நிதி ஆண்டில் ரூ 600.81 கோடியும், 2022-23 ஆம் நிதி ஆண்டில் இதுவரை ரூபாய் 345.18 கோடியும் ஆக மொத்தம் ரூபாய் 945.99 கோடி நியாய விலைக் கடைகளை நடத்துவதால் நட்டமடைந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கான நிதியுதவியினை பொது விநியோகத்திட்ட மானியமாக அரசு விடுவித்து ஆணையிட்டுள்ளது.
- தற்போது 28-2-2023 தேதிப்படி தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்கள் தங்கள் பதிவாளர் கட்டுப்பாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சங்கங்களையும் சேர்த்து சுமார் 7628 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் இச்சங்கங்களுக்கான 2023ஆம் ஆண்டு தேர்தல்களை நடத்த வேண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உயர் கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் 13,089 மாணவர்கள் உயிரிழப்பு; மத்திய அரசு அதிர்ச்சித் தகவல்!