ETV Bharat / state

தொடர்ந்து வெளியாகும் வினாத்தாள்: நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம்!

சென்னை: அரையாண்டுத் தேர்வு வினாத்தாளைத் தொடர்ந்து தற்போது திருப்புதல் தேர்வுகளுக்கான வினாத்தாள்களும் சமூகவலைதளங்களில் செயலி மூலம் வெளியிடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Jan 8, 2020, 10:07 AM IST

கேள்வித்தாள்
கேள்வித்தாள்

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு 2019 டிசம்பர் 11ஆம் தேதிமுதல் 23ஆம் தேதிவரை நடைபெற்றது. அப்போது, ஷேர்சேட், ஹலோ உள்ளிட்ட செயலிகளில்

  • ஒன்பதாம் வகுப்பு தமிழ்,
  • பத்தாம் வகுப்பு சமூக அறிவியல்,
  • பதினோராம் வகுப்பு உயிரியல்,
  • பன்னிரெண்டாம் வகுப்பு வேதியியல்

ஆகிய நான்கு பாடங்களைச் சார்ந்த அரையாண்டு வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்கூட்டியே வெளிவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பள்ளிக் கல்வித் துறை, காவல் துறை தரப்பிலிருந்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், தற்போது பள்ளிகளில் நடைபெறும் திருப்புதல் தேர்வின் வினாத்தாளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், பன்னிரெண்டாம் வகுப்பு வேதியியல் திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாளை வெளியிட்டது மட்டுமின்றி காணொலியில் ஒருவர், 'பல்வேறு வினாத்தாள்களுக்கு எங்கள் இணைய பக்கத்தை தொடர்ந்து பாருங்கள்' என சர்வசாதாரணமாகத் தெரிவிக்கின்றார்.

சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகும் கேள்வித்தாள்

மேலும், வரும் மார்ச் மாதம் 5, 8, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் தொடங்கவிருக்கும் சூழலில், பள்ளிக் கல்வித் துறை தரப்பிலிருந்து நடத்தப்படும் தேர்வுகளுக்கான வினாத்தாள்களும் முன்கூட்டியே வெளியாவது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதாக கல்வியியல் வல்லுநர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க : பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..!

Intro:சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வெளியாகும் கேள்வித்தாள்

நடவடிக்கை எடுக்குமா? அரசு

Body:சென்னை,

பள்ளி மாணவர்களுக்கான தேர்வு வினாத்தாள்கள் தொடர்ந்து சமூகவலைதளங்களில் வெளியாவதால் பொதுத்தேர்வு கேள்வித்தாளும் வெளியாகுமா?என மாணவர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அரையாண்டு வினாத்தாளை தொடர்ந்து தற்போது திருப்புதல் தேர்வுகளுக்கான வினாத்தாள்களும் சமூகவலைதளங்களுக்கான அப்ளிகேஷன் மூலம் வெளியிடப்பட்டு உள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11 ம் தேதி முதல் 23ம் தேதி வரை தமிழகத்தில் அரையாண்டு தேர்வு நடைபெற்றது. அப்போது ஷேர்சேட், ஹலோ ஆப் ,போன்ற அப்ளிகேஷன் வழியாக ஒன்பதாம் வகுப்பு தமிழ் ,பத்தாம் வகுப்பு சமூக அறிவியல், பதினோராம் வகுப்பு உயிரியல், பன்னிரண்டாம் வகுப்பு வேதியியல் ஆகிய நான்கு பாடங்களை சார்ந்த அரையாண்டு வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்கூட்டியே வெளிவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் தொடர்ந்து கேள்வித்தாள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது பள்ளிகளில் திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகின்றன இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள பன்னிரண்டாம் வகுப்பு வேதியல் திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் ஷேர்சேட் எனப்படும் செயலியின் மூலம் தற்போது முன்கூட்டியே வெளியாகியுள்ளது .

வினாத்தாள்களை வெளியிடும் நபர்களே வீடியோக்களில் தோன்றி வினாத்தாள் வெளியாவது தொடரும் என்றும் தொடர்ந்து தங்கள் இணைய பக்கத்தை தொடருங்கள் என்று சர்வசாதாரணமாக தெரிவிக்கின்றனர்.
இது போன்று தொடர்ந்து வினாத்தாள்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் பள்ளிக்கல்வித்துறை
மற்றும் காவல்துறை தரப்பிலிருந்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மாணவர்களின் எதிர்கால நலனில் பள்ளிக்கல்வித்துறை அமைதிகாப்பது சரியான நடவடிக்கையாக இருக்காது என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது .

வரும் மார்ச் மாதம் துவங்கி 5, 8 ,10 ,11 ,12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் துவங்க இருக்கும் சூழலில் பள்ளிக்கல்வித்துறை தரப்பிலிருந்து நடத்தப்படும் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாவது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கின்றது.

சமூக ஊடக செயலிகளில் வரும் கேள்வித்தாள்களை மாணவர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டால் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு கூட தயாராகமல் அப்ளிகேஷனை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் கல்வித்துறை உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.