இது குறித்து வேளாண்மை இணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்டங்களில் அறுவடை, நாற்று விடும் பணிகள் நடந்து வருகிறது. இரு மாவட்ட விவசாயிகளுக்கும் தேவையான உரங்கள், பயிர்ப் பாதுகாப்பு மருந்துகள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, நடமாடும் உர விற்பனை வாகனங்கள் மூலம், விவசாயிகளின் இடத்திற்கே சென்று உரங்கள் வழங்கப்படுகிறது.
யூரியா - 4 ஆயிரத்து 70 மெட்ரிக் டன், டி.ஏ.பி., - 2 ஆயிரத்து 163 மெட்ரிக் டன், பொட்டாஷியம் - ஆயிரத்து 340 மெட்ரிக் டன் உட்பட மொத்தம் 12 ஆயிரத்து 293 மெட்ரிக் டன் உரம் இருப்பு உள்ளது.
வேளாண் இடு பொருட்களை விற்பனையாளர்கள், 'பாயின்ட் ஆப் சேல்' கருவி வாயிலாக மட்டும், விற்பனை செய்ய வேண்டும். அப்போது, வியாபாரிகள், விவசாயிகள், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். உரங்கள் வாங்க வரும் விவசாயிகள், ஆதார் அட்டையைக் கட்டாயம் எடுத்து வர வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நடமாடும் உரக்கடையை தொடக்கி வைத்த வேளாண் துறை