ETV Bharat / state

12 மணி நேர வேலை சட்ட மசோதா: திமுகவை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் போராட்டம்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

திமுக அரசு வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் சட்ட மசோதாவை நிறைவேற்றுவது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச்செயலாளர் செல்வா ஜி.செல்வா தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 24, 2023, 3:37 PM IST

சென்னை: தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் சட்ட மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. நேற்று முன்தினம்(ஏப்.22) சென்னை மெரினா உழைப்பாளர் சிலை எதிரில் சட்ட நகலை எரித்து மாமன்ற உறுப்பினர் பிரியதர்ஷினி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச்செயலாளர் செல்வா தலைமையில் சிந்தாதிரிப்பேட்டை மே தினப்பூங்கா முன்பு, அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்த மசோதாவிற்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் செல்வா ஜி.செல்வா, "12 மணி நேர வேலை என்ற சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் திமுக அரசு நிறைவேற்றி இருக்கிறது. இந்த சட்ட மசோதாவை நிறைவேற்றியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எள்ளளவும் ஏற்கவில்லை.

இதில் 6 விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளனர். வேலை நேரம் மட்டுமல்லாமல் விடுப்பு எடுப்பதற்கான உரிமை, எவ்வளவு நேரம், தொழிலாளி வேலை செய்ய வேண்டும், கூடுதலாக எவ்வளவு நேரம் வேலை செய்தால் கூடுதல் ஊதியம் போன்றவை பற்றி தெளிவாக எதுவும் குறிப்பிடவில்லை.

எட்டு மணி நேரம் வேலை செய்தால், மூன்று நாள் விடுமுறை என்று தவறான தகவலை தமிழ்நாடு அரசு சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. முற்போக்கான அரசியலில் இருக்கக்கூடிய மாநிலத்தில் திமுக அரசு இப்படியான சட்டங்களை நிறைவேற்றுவது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

மே தினப்பூங்கா என்பது முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி இருக்கும்போது, எட்டு மணி நேர வேலைக்காக போராடி உயிர் நீத்தவர்களுக்காக திறந்து வைத்தார். அது மட்டுமில்லாமல் எட்டு மணி நேர வேலையை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி தான் குரல் கொடுத்தார்.

பன்னாட்டு முதலாளிகள், தமிழ்நாட்டு மக்களின் உழைப்பை சுரண்டுகிற வகையில் சட்டம் கொண்டு வருவதை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும். எனவே, தமிழ்நாடு அரசு இந்தச் சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மே தினப்பூங்கா முன்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளோம்.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் இந்த சட்டத்தில் இருக்கக்கூடிய பாதகங்கள் குறித்து பேசவில்லை. 48 மணி நேர வேலை செய்தால் மூன்று நாள் விடுப்பு என்பதெல்லாம் இந்தஸ் சட்டத்தில் இல்லை. தமிழ்நாட்டில் செவிலியர், மருத்துவர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மின்சாரத்துறை ஊழியர்கள், போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்கள், மாநகராட்சியில் வேலை செய்யக்கூடிய தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் எனப் பலரும் போராடி வருகிறார்கள்.

இவர்களுடைய போராட்டத்தை அரசாங்கம் காது கொடுத்து கேட்காமல் முதலாளிகள் சொல்வதை மட்டும் கேட்பேன் என இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. எனவே, இந்த சட்ட மசோதாவை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆதம்பாக்கம் மூதாட்டி கொலை வழக்கு; கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.