சென்னை: தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை செயல்படும் டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனின் திருவுருவச்சிலை நிறுவப்படும் என்றும், டிபிஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் வைக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்தது.
அதேபோல், 2020-2021ஆம் கல்வியாண்டில் கற்றல்- கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த அரசுப் பள்ளிகளுக்குப் பேராசிரியர் பெயரில் விருது வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் பேராசிரியர் அன்பழகன் விருதுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து சிறந்த அரசுப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒரு மாவட்டத்திற்கு தலா மூன்று பள்ளிகள் வீதம் 114 பள்ளிகள் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளன.
இதையும் படிங்க: பள்ளிக்கல்வித்துறை வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயர்.. முதலமைச்சர் அறிவிப்பு