ETV Bharat / state

சென்னையில் ஒரே நாளில் 100ஐ கடந்த கரோனா தொற்று - சென்னையில் ஒரே நாளில் 100 பேருக்கு கரோனா

சென்னை: மாநகராட்சி முழுவதும் ஒரே நாளில் 103 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona
corona
author img

By

Published : Apr 29, 2020, 4:50 PM IST

சென்னையில் கரோனா தொற்று தீவிரமடைந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் சென்னையில் மட்டும் குறைவதாக இல்லை. நேற்று தமிழ்நாட்டில் 121 பேர் கரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்தது. அதில், சென்னையில் தான் அதிகபட்சமாக 103 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 673ஆக உள்ளது.

இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பட்டியலை, மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு:

தண்டையார்பேட்டை - 70 பேர்,

திரு.வி.க. நகர் - 128 பேர்,

தேனாம்பேட்டை - 81 பேர்,

திருவொற்றியூர் - 15 பேர்,

அடையார் - 19 பேர்,

பெருங்குடி - 9 பேர்,

ஆலந்தூர் - 9 பேர்,

வளசரவாக்கம் - 26 பேர்,

சோழிங்கநல்லூர் - 2 பேர்,

அண்ணாநகர் - 65 பேர்,

கோடம்பாக்கம் - 60 பேர்,

மணலி - ஒருவர்,

மாதாவரம் - 4 பேர்,

அம்பத்தூர் - 19 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13ஆக உள்ளது. தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 455 பேரில், 204 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதையும் படிங்க: சாலைகளில் வசிப்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை - தனிக்குழு அமைக்கக் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.