ETV Bharat / state

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற குகேஷுக்கு பிரமாண்ட பாராட்டு விழா! - 44th Chess Olympiad

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சதுரங்க நாயகன் கிராண்ட் மாஸ்டர் குகேஷுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

ஒலிம்பியாட் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற குகேஷிற்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை

author img

By

Published : Dec 15, 2022, 10:02 AM IST

சென்னை: மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்றது. இதில் சதுரங்க நாயகன் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

இந்நிலையில், மேல் அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா இணைப்பு பள்ளியில் சதுரங்க நாயகன் கிராண்ட் மாஸ்டர் குகேஷை பாராட்டும் விதமாக பிரமாண்ட பாராட்டு விழா டிசம்பர் 14ம் தேதியான நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் பத்ம விபூஷன் விருது பெற்ற விஸ்வநாதன் ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குகேஷுக்கு வேலம்மாள் வித்யாலயா பள்ளி சார்பில் ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் குகேஷின் பயிற்சியாளர் கிராண்ட்மாஸ்டர் விஷ்ணு பிரசன்னா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டு குகேஷுக்கு வாழ்த்து பாராட்டு தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சென்னை பள்ளிகளில் நிர்பயா நிதியின்கீழ் சானிட்டரி நாப்கின்: மாநகராட்சி திட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.