சென்னை: துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பு பயணிகள் விமானம் இன்று காலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில், வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் சோதனையிட்டனர்.
அப்போது, சென்னையைச் சேர்ந்த முகமது (27) என்ற பயணியின் உடைமைகளை சோதனையிட்டபோது, கிச்சன் செட் ஸ்டாண்ட் குழாயில் தங்கத்தை மறைத்து எடுத்துவந்தது தெரியவந்தது.
அவரிடம் இருந்த 1 கிலோ 389 கிராம் தங்கக் கம்பிகளை கைப்பற்றிய சுங்கத்துறையினர், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: குளிக்கும் போது பெண்ணை வீடியோ எடுத்த சட்ட மாணவர் கைது!