ETV Bharat / state

24 மாவட்டங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணிக்கு 1.5 லட்சம் விண்ணப்பம் - தமிழ்நாட்டில் 13331 தற்காலிக ஆசிரியர் பணியிடம்

தமிழ்நாட்டில் 13,331 தற்காலிக ஆசிரியர் பணியிடத்திற்கு 1.5 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்தன.

தற்காலிக ஆசிரியர் பணிக்கு மலைபோல் குவிந்த விண்ணப்பங்கள்

author img

By

Published : Jul 7, 2022, 6:32 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 காலிப்பணியிடங்களில் 24 மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு இதுவரை 1.5 லட்சம் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் 13,331 பேர் தற்காலிகமாக நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதற்கான வழிகாட்டுதலையும் பள்ளிக்கல்வித்துறை வழங்கியது.

அதற்கு தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளதால், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை அதிகாரத்திற்குட்பட்ட 14 மாவட்டங்களில் விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. 24 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஒரே நபர் 5-க்கும் மேற்பட்டுள்ள பள்ளிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதனால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தற்காலிக ஆசிரியர் நியமனம்: தகுதியானவர்களுக்கு மட்டுமே பணி - நீதிமன்றம் உத்தரவு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.