செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா தொழில்நுட்ப பூங்காவில் இயங்கிவரும் தனியார் ஆடை ஏற்றுமதி சென்டர் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கிவருகிறது. இந்த நிறுவனத்தில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்நிறுவனத்தின் ஆடை, ஏற்றுமதி உரிமம் கடந்த 2018ஆம் ஆண்டு முடிவடைந்துவிட்டது. இதையடுத்து மேலாளர்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு வரை தொழிற்சாலையை நடத்தி வந்த நிலையில் தொழிலாளர்களுக்கு 13 மாத கால பி.எஃப். தொகை நிலுவையில் உள்ளது.
மேலும் தொழிலாளர்களுக்கு 3 மாத சம்பளமும் நிலுவையில் உள்ள நிலையில், இந்நிறுவனம் திடீரென மூடப்பட்டது. தற்போது தொழிலாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் கம்பெனியில் உள்ள இயந்திரங்கள், உதிரி பாகங்களை விற்று தொழிலாளர்கள், அலுவலர்களுக்கும் பணம் வழங்கலாம் என ஒரு தரப்பு முடிவு செய்தது.
எனவே 120 தொழிலாளர்களுக்கு தரவேண்டிய சம்பளம், வைப்பு நிதி திரும்ப கிடைக்கும் வரை தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது அந்நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: தொடரும் ராணுவ வீரர்கள் பெயரிலான மோசடி!