ETV Bharat / state

கிராமந்தோறும் விழிப்புணர்வு காவலர்கள் திட்டம் அமல்! - கிராம விழிப்புணர்வுக் காவலர்கள் திட்டம்

செங்கல்பட்டு: ஒவ்வொரு கிராமத்தையும் ஒரு காவலர் தனிப்பட்ட முறையில், நட்புறவோடு அணுகும் கிராம விழிப்புணர்வுக் காவலர்கள் முறை அமல்படுத்தப்பட்டது.

கிராம விழிப்புணர்வுக் காவலர்கள் திட்டம்
கிராம விழிப்புணர்வுக் காவலர்கள் திட்டம்
author img

By

Published : Jan 7, 2021, 8:40 AM IST

தமிழ்நாடு சிறப்பு டி.ஜி.பி.,யாக தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் ராஜேஸ் தாஸ் தமிழ்நாடு காவல் துறையினருக்கான புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.

கிராம விழிப்புணர்வுக் காவலர்கள் திட்டம்:

இத்திட்டத்தின்படி, தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு கிராமத்தையும், அந்தந்தப் பகுதியில் இருக்கும் காவல் நிலையங்களின் காவலர்கள் தனிப்பட்ட முறையில் அக்கறை செலுத்தி கவனிக்க வேண்டும்.

இதற்கு, கிராம விழிப்புணர்வுக் காவலர்கள் திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த வகையில், படாளம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட, கிராமத்தினருக்கு இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டம் குறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் இந்தத் திட்டம் பற்றி கிராமத்தினருக்கும், காவல் துறையினருக்கும் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் படாளம் காவல் நிலையக் காவலர்கள், படாளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 75 சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

திட்டதின் முக்கிய அம்சங்கள்:

கிராமத்திற்குப் பாெறுப்பேற்கும் காவலர்கள், கிராம மக்களுடன் நட்புணர்வுடன் பழகுவது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது, குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, அக்கிராம மக்களுடன் கலந்து ஆலோசித்து எடுப்பது போன்றவை இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ‘சென்னையில் இதுவரை 90,794 மருத்துவ முகாம்கள் நடந்துள்ளன’- மாநகராட்சி நிர்வாகம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.