ETV Bharat / state

பத்ம ஸ்ரீ விருது பெறும் பாம்பு பிடி வீரர்கள்.. பின்னணி என்ன?

தமிழ்நாட்டை சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து பத்ம ஸ்ரீ விருது பெறும் பாம்பு பிடி வீரர்கள்

author img

By

Published : Jan 26, 2023, 8:24 AM IST

செங்கல்பட்டு: பாம்பு பிடிப்பதில் வல்லவர்களான தமிழ்நாட்டைச் சேர்ந்த வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பில் இவர்கள் விலங்குகள் நலப் பிரிவில் பத்மஸ்ரீ விருதைப் பெறுகின்றனர்.

கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்குப் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி குடியரசு தினத்தை முன்னிட்டு 2023 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு அருகே உள்ள சென்னேரி கிராமத்தில் இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் இவர்கள் இருவரும். அபாயகரமான மற்றும் விஷம் கொண்ட பாம்புகளைப் பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள். முறையான கல்வியைப் பெறவில்லை என்றாலும் உலகம் முழுவதும் பயணம் செய்து பாம்புகளைப் பிடித்துள்ளனர்.

அவர்களது முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த முறையைப் பின்பற்றி பாம்பு பிடித்து வருகின்றனர். இந்திய ஹெல்த்கேர் பிரிவில் இருளர் இன மக்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 6 தமிழர்கள் உள்பட 106 பேருக்கு பத்ம விருதுகள் - மத்திய அரசு அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.