ETV Bharat / state

'திமுக ஆட்சி அமைத்த முதல் மாதமே ஒவ்வொரு வீட்டிற்கும் தலா ரூ.5 ஆயிரம் வந்து சேரும்' - டி.ஆர். பாலு பேச்சு! - தாம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி செய்திகள்

செங்கல்பட்டு: திமுக ஆட்சி அமைத்த முதல் மாதமே ஒவ்வொரு வீட்டிற்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் வந்து சேரும் என திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

தாம்பரத்தில் நடந்த நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பேச்சு

author img

By

Published : Mar 16, 2021, 6:08 PM IST

Updated : Mar 16, 2021, 10:05 PM IST

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் சட்டப்பேரவைத்தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர். ராஜாவை ஆதரித்து கூட்டணி கட்சியினரின் செயல்வீரர்கள் கூட்டம் தாம்பரம் - முடிச்சூர் சாலையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, 'திமுக ஆட்சியை எளிதில் பிடித்து விடும் என்ற எண்ணம் நமக்கு வேண்டாம்.

இப்படி யாராவது சொன்னால் அவர்கள் தான் நமது முதல் எதிரி. எனவே, கடந்த தேர்தல்போல் இல்லாமல் கடுமையாக உழைக்க வேண்டும். கடந்த தேர்தலில் கடுமையாக உழைத்து வெற்றி பெற்று இருந்தால், தலைவர் கருணாநிதியை நாம் இன்று இழந்திருக்க மாட்டோம்' எனத் தெரிவித்தார்.

மேலும், 'நமது தேர்தல் அறிக்கை ஒவ்வொரு தமிழனும் பயன்பெறும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. பெண்கள் அரசு பஸ்ஸில் இலவசமாகப் பயணம் செய்யலாம்' என்ற அவர் 'இதற்காக அடிக்கடி பெண்கள் பயணம் செய்ய வேண்டாம்' எனக் கூட்டத்திலிருந்த பெண்களிடம் கேட்டுக்கொண்டார்.

தாம்பரத்தில் நடந்த நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பேச்சு

அதேபோல் திமுக வெற்றி பெற்ற முதல் மாதமே உங்களின் ஒவ்வொரு வீட்டையும் தேடி ஐந்தாயிரம் ரூபாய் வந்து சேரும். கரோனா உதவித்தொகையாக நான்காயிரம் ரூபாயும், குடும்பத்தலைவிக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஆயிரமும் சேர்த்து வழங்கப்படும்' என்றார்.

இதையும் படிங்க...18 வயதை எட்டிய முதல் வாக்காளர்களின் வாக்கு எந்த கட்சிக்கு? - ஈடிவி பாரத் கள ஆய்வு

Last Updated : Mar 16, 2021, 10:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.