செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோயிலை சேர்ந்தவர் கே.டி.ராகவன். இவர் பாரதிய ஜனதா கட்சியில் மாநில பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இவரின் ஆபாச காணொலியை பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் பதவியை கே.டி.ராகவன் ராஜினாமா செய்தார். இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகார்
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மேலும் ஒருவர் அவர் மீது புகார் அளித்துள்ளார்.
அதில், "எனது மனைவியிடம் கே.டி.ராகவன் ஆபாசமாக காணொலியில் பேசி வந்தார்.
மிரட்டல்
மனைவியை கண்டித்த போது எனக்கு போன் செய்து மிரட்டினார். பின்னர் என் மனைவியை கடத்தி சென்று விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அவரிடம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
ஏற்கனவே கே.டி.ராகவன் மீது எழுந்த ஆபாச காணொலி சர்ச்சை அடங்குவதற்குள், மேலும் ஒருவர் தனது மனைவியை மீட்டு தரக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு எதிராக மதனின் புதிய ஆடியோ - பரபரப்பு தகவல்