செங்கல்பட்டு: தென் மண்டல விலங்கு பராமரிப்பாளர்களுக்கான மூன்று நாள் திறன் வளர்ப்பு பயிற்சிக் கருத்தரங்கம், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், நேற்று மார்ச் 9ஆம் தேதி தொடங்கியது. புதுடெல்லியில் உள்ள மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்துடன் இணைந்து, 'உயிரியல் பூங்காக்களில் வன விலங்குகள் மேலாண்மை' என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் உள்ள, 11 உயிரியல் பூங்காக்களில் இருந்து, விலங்குக் காப்பாளர்கள் பங்கேற்கின்றனர். இந்தப் பயிற்சியில், விலங்குக் காப்பாளர்களுக்கு, விலங்குப் பராமரிப்பு, திறன் மேலாண்மை, அடிப்படை சுகாதார நெறிமுறைகள் ஆகியவை குறித்து பயிற்சி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாஜக பிரமுகர் கல்யாணராமன் நீதிமன்றத்தை சட்டத்தை மதிக்கமாட்டாரா? - உயர் நீதிமன்றம் கேள்வி