ETV Bharat / state

வாகன ஒப்படைப்பு விவகாரம்: கூட்டமாக வந்த உரிமையாளர்கள்

செங்கல்பட்டு: காவல் நிலையத்தில் இருசக்கர வாகனங்களை பெற மக்கள் குவிந்ததால் சமூக இடைவெளி பிரச்னை ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.

seized vehicle owners come to take vehicles as crowd in chengalpattu

author img

By

Published : Apr 17, 2020, 5:26 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுபாக்கம் காவல்நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் வலம் வந்த 300க்கும் மேற்பட்ட வாகனங்களை காவல்துறை ஆய்வாளர் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து இருந்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நேற்று முதல் வாகன உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டு வருகிறது. இன்று இருசக்கர வாகனங்களை பெற அதிக அளவில் அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் வாகன உரிமையாளர்கள் ஒன்று திரண்டு குவிந்ததால் சமூக இடைவெளி பிரச்னை ஏற்பட்டது.

கூட்டமாக வந்த வாகன உரிமையாளர்கள்

கூட்டம் அலை மோதியதால் காவல்துறை ஆய்வாளர் வாகன உரிமையாளர்களை விரட்டினார். இன்னும் ஊரடங்கு நிலுவையில் உள்ள நிலையில் காவல் நிலையத்தில் வாகனங்களை பெற உரிமையாளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவை மீறிய 400 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.