ETV Bharat / state

சிவசங்கர் பாபா வழக்கு - பெண் ஆசிரியர்கள் தலைமறைவு

சிவசங்கர் பாபா வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்த பெண் ஆசிரியர்கள் வீட்டை பூட்டிவிட்டு தப்பியோடிய நிலையில், அவர்களை கைது செய்ய சிபிசிஐடி போலீஸ் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Siva Shankar Baba sexual harassment case
சிவசங்கர் பாபா
author img

By

Published : Jul 17, 2021, 12:51 PM IST

செங்கல்பட்டு: கேளம்பாக்கத்தில் உள்ள சுசில் ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிவசங்கர் பாபா அறைக்கு பள்ளி மாணவிகளை அழைத்து சென்றதாக பக்தை சுஷ்மிதா என்பவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மேலும் ஆதாரங்களை திரட்ட சிபிசிஐடி தீவிரம் காட்டி வரும் நிலையில், அவர் நடத்திய பள்ளியில் பணிபுரிந்து வரும் பெண் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்மன் கொடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்தது.

சம்மன்

முதற்கட்டமாக சிவசங்கர் பாபா பள்ளியில் பணியாற்றும் 5 பெண் ஆசிரியர்களுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. சிபிசிஐடி போலீசார் சம்மன் கொடுக்க சென்றபோது, வீட்டை பூட்டைவிட்டு அவர்கள் தப்பியோடினர்.

இதையடுத்து, 3 பள்ளி பெண் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஐந்து பேரின் வீட்டில் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது. தப்பியோடியவர்களை பிடிக்கவும், தலைமறைவாக உள்ளவர்களின் பட்டியலை தயாரிக்கும் பணியிலும் சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். முன்ஜாமீன் பெற்ற பெண் ஆசிரியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பள்ளியில் ரகசிய இடம்: வெளிவந்த பாபாவின் சொகுசு அறை ஆட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.