செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி கோவிந்தராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பரதன். இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக காவல் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவருடைய மனைவி வனிதா.
இவர்கள் இருவரும் சேர்ந்து, கூடுவாஞ்சேரி காவல் துறையினர் ரோந்துப் பணிகளை மேற்கொள்வதற்கு வசதியாகப் புதிய டாட்டா சுமோ கார் ஒன்றை வாங்கி மாவட்ட காவல் துறையினருக்கு அன்பளிப்பாக அளித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. கண்ணன், வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார். அதன்பின்னர் வாகனம் கூடுவாஞ்சேரி காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
காவல் துறையினரின் ரோந்துக்காக புதிய கார் வாங்கிக் கொடுத்த தம்பதியினரை அனைத்துத் தரப்பினரும் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் அதிநவீன கண்காணிப்பு கேமரா - எஸ்.பி.ஜெயக்குமார்