ETV Bharat / state

பாலியல் தொல்லை என சோஷியல் மீடியாவில் பறந்த புகார்; தனியார் காப்பக நிர்வாகி கைது

செங்கல்பட்டு அருகே பனங்காட்டுப்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் காப்பகத்தில் பாலியல் தொல்லை தந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அக்காப்பகத்தின் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். மேலும், காப்பகத்திற்கு சீல் வைத்தனர்.

sexual harassment
பெண்களுக்கு பாலியல் தொல்லை
author img

By

Published : Jul 4, 2023, 10:38 PM IST

தனியார் காப்பகத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காப்பக நிர்வாகி கைது

செங்கல்பட்டு: பனங்காட்டுப்பாக்கம் பகுதியில் மன வளர்ச்சி குன்றியோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான காப்பகம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த காப்பகத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிர்வாகியை போலீசார் இன்று (ஜூலை 4) கைது செய்தனர். மேலும், சம்பந்தபட்ட காப்பகத்திற்கு சீல் வைத்தனர்.

திருப்போரூர் அடுத்த பனங்காட்டுப்பாக்கம் பகுதியில் மன வளர்ச்சி குன்றியோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான தனியார் காப்பகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து இந்த காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தை வீரமணி என்பவர் நடத்தி வருகிறார்.

இந்த காப்பகத்தில் பெண்கள், முதியோர், மனவளர்ச்சி குன்றியோர் என 30 பெண்கள், 25 ஆண்கள் ஆக மொத்தம் 55 பேர் உள்ளனர். இந்நிலையில் இந்த காப்பகத்தில் வசிக்கும் பெண் ஒருவரிடம் காப்பக நிர்வாகியான வீரமணி பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அப்பெண் சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். இதன் அடிப்படையில், தாம்பரம் கோட்டாட்சியர் செல்வகுமார் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் விசாரணையில் காப்பகத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நேற்றிரவு 12 மணி அளவில் வருவாய்த்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் காப்பகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு இருந்தவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மன வளர்ச்சி குன்றிய பெண்களிடம் காப்பக நிர்வாகி வீரமணி பாலியல் தொல்லையில் ஈடுபட்டது உறுதியானது.

இதையடுத்து அவரது வீட்டிற்குச் சென்ற போலீசார் வீரமணியை இன்று (ஜூலை 4) காப்பகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் மாமல்லபுரம் போலீஸ் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன், திருப்போரூர் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் விசாரணை மேற்கொண்ட நிலையில் வீரமணியை கைது செய்தனர். இந்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியோரை வேறு காப்பகத்துக்கு இடமாற்றம் செய்ய ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன.

மேலும், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே காப்பகத்தை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத், மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆகியோர் பார்வையிட்டனர். இதையடுத்து, அக்காப்பகத்திற்கு உரிய அனுமதி பெறபட்டுள்ளதா? பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? மனவளர்ச்சி குன்றியோரை கவனிக்க உரிய நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், 'தற்போது இந்த காப்பகம் பாதி அரசு புறம்போக்கு நிலத்திலும் இன்னொரு பாதி ஏரி நீர்நிலை புறம்போக்கு நிலத்திலும் செயல்பட்டு வருவதால் காப்பகத்திற்கு உரிய அனுமதி கிடைக்கவில்லை என்றார்.

அனுமதி இல்லாமல் இந்த காப்பகம் இயங்கி வந்ததால் இங்கு இருக்கும் மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியவர்கள் மற்றும் முதியவர்களை உரிய அனுமதியுடன் இயங்கும் வேறு காப்பகத்திற்கு மாற்றிய பின்னர், இந்த காப்பகத்தை மூடி சீல் வைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்... எய்ம்ஸ் மாணவர் உள்பட கும்பல் கைது! டெல்லி போலீசார் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.