செங்கல்பட்டு: தாம்பரம் அருகே புது பெருங்களத்தூரைச் சேர்ந்த பிரவின்குமார்(37) என்பவர் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் சிவகங்ககையில் உள்ள தனது சகோதரரின் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக கடந்த 30ஆம் தேதி சென்று இன்று மீண்டும் இன்று (செப்.5) வீடு திரும்பியுள்ளார்.
இதனிடையே வீட்டின் கதவுகளை உடைத்து, பீரோவில் இருந்த 8 சவரன் தங்க நகைகள், ரூ.17,000 ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து புது பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில், குற்றப்பிரிவு போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், எவ்விதமான தடயங்களும் கிடைக்காததால் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இவ்வாறாக, தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொள்ளையர்கள் தொடர் கைவரிசை காட்டி வருவதால் அப்பகுதியினர் அச்சமடைந்து வருகின்றனர்.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க அப்பகுதியில் சிசிடிவிகள் அமைத்தும், போலீசார் இரவு நேரங்களில் நகர் மற்றும் புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'அண்ணா நூலகம் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே பெருமை..!' - அரவிந்த் கெஜ்ரிவால்