தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் தண்டவாளத்தில் கிடப்பதாக தாம்பரம் ரயில் இருப்பு பாதை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாம்பரம் காவல் துறையினர், தண்டவாளத்தில் கிடந்த சடலத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இறந்த நபர் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டரா என்பது குறித்து தாம்பரம் இருப்பு பாதை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த பத்து நாள்களில் இப்பகுதியில் ஐந்தாவது நபர் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.