ETV Bharat / state

மதுராந்தகத்தில் தடையை மீறிய வாகன ஓட்டிகளுக்கு காவல் துறை நூதன முறையில் தண்டணை - Police gave new penalties for Motorist who violated the law

செங்கல்பட்டு: மதுராந்தகத்தில் 144 தடையை மீறி ஊருக்குள் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களைக் காவல் துறையினர், கரோனா விழிப்புணர்வு ஓவியம் வரைந்து அதன் அருகில் நிற்கவைத்து நூதனமுறையில் தண்டனை வழங்கியுள்ளனர்.

மதுராந்தகத்தில் தடையை மீறிய  வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை நூதன முறையில் தண்டணை

author img

By

Published : Apr 16, 2020, 2:09 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் நான்கு நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து மதுராந்தகம் நகராட்சி உள்ள அனைத்து பகுதிக்கும் சீல்வைக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆங்காங்கே காவல் துறையினர் ரோந்து சென்றுகொண்டிருக்கின்றனர்.

மதுராந்தகத்தில் தடையை மீறிய வாகன ஓட்டிகளுக்கு காவல் துறை நூதன தண்டனை

இந்த நிலையில், இதனை மீறியும் மதுராந்தகம் நகருக்குள் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த நபர்களைப் போக்குவரத்துக் காவல் துறை ஆய்வாளர் ஆனந்தராஜ் பிடித்துள்ளார். அவர்களைப் போக்குவரத்துக் காவல் துறை சார்பில் வரையப்பட்ட கரோனா ஓவியம் அருகே நிற்கவைத்துள்ளனர்.

மேலும், கிருமி நாசினி மூலம் கைகளைக் கழுவச் சொல்லி அதன்பின்பு கரோனாவால் ஏற்படும் பாதிப்புகளையும், அது ஒருவருக்கு வந்தால் ஏற்படும் சமூக பாதிப்புகளையும் எடுத்துக்கூறி அறிவுரை வழங்கி பின்பு அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க: மாட்டுத்தாவணி பூச்சந்தை தற்காலிகமாக இடமாற்றம் - மாவட்ட ஆட்சியர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.