ETV Bharat / state

மனவளர்ச்சி குன்றிய பெண் பாலியல் பலாத்காரம் - இருவர் கைது! - Two men arrested

செங்கல்பட்டில் மனவளர்ச்சி குன்றிய பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மனவளர்ச்சி குன்றிய பெண் பாலியல் பலாத்காரம் - இருவர் கைது!

author img

By

Published : May 19, 2022, 1:02 PM IST

Updated : May 20, 2022, 4:11 PM IST

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான இளம்பெண், மனவளர்ச்சி குன்றிய நிலையிலும், உடல் ஊனமுற்ற நிலையிலும் இருக்கிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக, அப்பெண் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அப்பெண் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த 4 பேர் அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீடு ஒன்றில் வைத்து, அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினர், மே 18இல் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், போலீசார் உடனடியாக விசாரணையை மேற்கொண்டனர். இதில் ராமநாதன், அஜய், சசிகுமார் மற்றும் மதன் ஆகியோர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிய வந்தது.

இதனையடுத்து ராமநாதன், அஜய் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள சசிகுமார், மதன் ஆகியோரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுமிகளின் ஆபாசப் படத்தை ஷேர் செய்த இளைஞர் மீது போக்சோ வழக்கு

Last Updated : May 20, 2022, 4:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.