கடலூர்
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் இருந்து உற்சவ மூர்த்திகளை பூமாலைகளால் அலங்கரித்து டிராக்டர், மினி லாரி போன்ற வாகனங்களில் ஊர்வலமாக பக்தர்கள் கொண்டு வந்தனர். இந்த ஊர்வலம் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு வந்ததும், அங்கு சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம், கல்பாக்கம் அதனை சுற்றியுள்ள 16 கிராமங்களில் இருந்து சுவாமிகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. பின்னர் கடற்கரையில் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை
கரோனா தொற்று பரவல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் கிராமத்தில் உள்ள பெருங்காரையடி மீண்ட அய்யனார் சுவாமிக்கு கோயிலில் வைத்து தீர்த்தவாரி நடைபெற்றது.
இதையும் படிங்க: பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயிலில் மயான பூஜை!