செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாக மதுராந்தகம் ஏரி உள்ளது. ஏரி முழுக் கொள்ளளவை எட்டினால் கடல் போன்று காட்சியளிக்கும்.
இந்த எரியின் முழுக் கொள்ளளவு 23.3 அடியாகும். இதில் தற்போது 22.8 அடிக்கு மேல் நீர் உள்ளது. விநாடிக்கு 100 கன அடிக்கு மேல் நீர் வந்து கொண்டிருக்கிறது.
ஏரி நிரம்பும் பட்சத்தில், உபரி நீர் கிளியாற்றின் வழியாக வெளியேற்றப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிளியாற்றின் கரையோரப் பகுதியிலுள்ள 21 கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உபரி நீர் வெளியேறும் பகுதியில் உள்ள நீர்நிலைகளுக்கு, எந்தக் காரணத்திற்காகவும் யாரும் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை பெருமழை: அம்பத்தூரை துவம்சம் செய்த விடா மழை