ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் சத்ய சாய்ராம் (25). இவர் கல்பாக்கம் இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில், பயிற்சி நிலை ஊழியராக பணிபுரிந்து வந்தார். கல்பாக்கத்தில் உள்ள அணுசக்தி வளாக விடுதியில் இவர் தங்கியிருந்தார்.
கடந்த ஞாயிறு (ஜுன்.20) அன்று விடுமுறை என்பதால், விடுதியை விட்டு சத்ய சாய் ராம் வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது. வெளியே சென்றவர், அன்று முழுவதும் விடுதிக்குத் திரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து, அவரது நண்பர்கள், ஆந்திராவில் உள்ள சத்ய சாய்ராமின் பெற்றோருக்குத் தகவல் அளித்தனர்.
ஆந்திராவிலிருந்து கல்பாக்கம் வந்த சத்ய சாய்ராமின் தந்தை நாகேஸ்வரராவ், மகன் காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துறையினர் அவரைத் தேடி வந்த நிலையில், இன்று (ஜுன்.22) அவர் கூவத்தூர் அடுத்த வேப்பஞ்சேரி என்ற பகுதியில், எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
தற்போது அவரது உயிரிழப்பு குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பட்டா கத்தியை காட்டி மதுபானம் கொள்ளையடித்த கும்பல்: விரட்டிப் பிடித்த போலீசார்!