செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கத்தில் வசித்து வருபவர் செந்தாமரை. இவர், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஆவர். இவரது மகன் நந்தகுமார். சித்த மருத்துவராக உள்ளார். இவர்கள் உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு, இன்று (பிப்.24), வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்க்கையில் பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த, 100 பவுன் நகைகள், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள், 5 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கூடுவாஞ்சேரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் 220 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி சென்ற இரண்டு பேர் கைது!