செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்தார்.
இன்று (டிச.5) அவர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து பணியில் சேர்ந்தார். அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது விவசாயிகளிடம் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்குவதாக உறுதியளித்தார்.
தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களை தொடர்புக் கொண்டு, மழைநீர் சூழ்ந்துள்ள இடங்களில் தண்ணீர் வடிய தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: புரெவி புயல்: பாதிக்கப்பட்ட கிராமங்களைப் பார்வையிட்ட எம்எல்ஏ!