ETV Bharat / state

நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு கரோனா தடுப்பூசி - corona virus

சென்னை: தாம்பரம் நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நீதிபதிகள்
நீதிபதிகள்
author img

By

Published : Jul 14, 2021, 9:46 AM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஆர்வமாக தடுப்பூசி செலுத்திவருகின்றனர். இதனால் மாவட்டந்தோறும் தடுப்பூசி முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

இதனைத் தொடர்ந்து சென்னையை அடுத்த தாம்பரம் நீதிமன்றம் வளாகத்தில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் விதமாக செங்கல்பட்டு மாவட்டம் சுகாதாரத் துறை சார்பில் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது,

இந்த முகாமை தாம்பரம் நீதிமன்ற சார்பு நீதிபதி என்.சுல்தான் ஹரிபின் தொடங்கிவைத்தார். இதில் நீதிபதிகள்,தாம்பரம் வழக்கறிஞர் சங்க தலைவர் கே.ரங்கராஜன், செயலாளர் ஆர்.பி.ஓம்பிரகாஷ் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். மேலும் உரிய மருத்துவ பரிசோதனையுடன் வழக்கறிஞர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.