தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கரோனா தொற்று தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள, செங்கல்பட்டு நகராட்சியின் வித்தியாசமான முயற்சியைக் கையாண்டுள்ளது.
அதாவது, நாய்களைப் பிடிக்க உபயோகிக்கும் வாகனத்தை, கரோனா பரிசோதனை வாகனமாக மாற்றி உபயோகித்து வருகிறது. இந்த முயற்சியைத் தமிழ்நாடு முழுவதும் பின்பற்றினால், அரசின் சிக்கன நடவடிக்கைக்கு மிகப்பெரிய முன்னுதாரணமாக இருக்கும் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.
கரோனா பரிசோதனை செய்யப் பணியாளர்களுக்குப் போதிய வசதிகள் செய்து தராததால் நாய் பிடிக்கும் வாகனத்தில் மக்களுக்குக் கரோனா பரிசோதனை செய்ய வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும், கரோனா பரிசோதனையில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு, மருத்துவ வசதி முகாம் ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு அதிகரிப்பு: அத்தியாவசியப் பணிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை