ETV Bharat / state

மக்களைத் தேடி மருத்துவம்: திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்துப் பெட்டகம் வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் - stalin intracted Makkalai Thedi Maruthuvam scheme beneficiary

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்துப் பெட்டகம் வழங்கி, மக்களைத் தேடி மருத்துவம் மற்றும் இன்னுயிர் காப்போம் , நம்மைக் காக்கும் 48 திட்டப் பயனாளிகளுடன் கலந்துரையாடி, 188 புதிய அவசரகால ஊர்திகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

stalin intracted Makkalai Thedi Maruthuvam scheme beneficiary, மக்களைத் தேடி மருத்துவம் 50 இலட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்

author img

By

Published : Feb 23, 2022, 3:18 PM IST

செங்கல்பட்டு: தமிழ்நாடு அரசின் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறையின் 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில், பயனாளிகளின் இல்லங்களுக்குச் சென்று முக்கியமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.

45 வயதிற்கும் மேற்பட்ட உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிகளுக்கான மருந்துகளை அவரவர் இல்லங்களில் வழங்குதல், நோய் ஆதரவு, இயன்முறை சிகிச்சை சேவைகள் வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசிஸ் செய்துகொள்வதற்குத் தேவையான பைகளை வழங்குதல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.

மக்களைத் தேடி மருத்துவம்
மக்களைத் தேடி மருத்துவம்

இத்திட்டத்தின் கள அளவிலான குழுவில், பெண் சுகாதார தன்னார்வலர்கள், நோய் ஆதரவு சிகிச்சை செவிலியர், இயன்முறை மருத்துவர்கள், இடைநிலை சுகாதாரச் சேவையாளர்கள் ஆகியோர் இடம் பெறுவர். பொதுச் சுகாதார துறையின் களப்பணியாளர்கள் இக்குழுவினரின் செயல்பாடுகளைக் கண்காணித்து வழிநடத்துவார்கள்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்துப் பெட்டகத்தை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சித்தாலப்பாக்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 188 அவசர ஊர்திகளை மக்கள் பயன்பாட்டிற்காகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் டயாலிசிஸ், சர்க்கரை நோய், பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட 50 லட்சமாவது பயனாளிகள் மூன்று பேருக்கு, அவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மருந்து பெட்டகங்களையும் வழங்கி அரசு வழங்கும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டத்தின்கீழ், விபத்தில் கால்களை இழந்தவர்களுக்கு இலவச செயற்கை கால்களை வழங்கினார்.

மக்களைத் தேடி மருத்துவம்
மக்களைத் தேடி மருத்துவம்

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மற்றும் தென் சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டப் பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: தேசிய உயர் கல்வித் தகுதிகள் கட்டமைப்பு நீட் தேர்வை விட கொடுமையானது - பொன்முடி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.