ETV Bharat / state

செங்கல்பட்டு தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும், களநிலவரமும்...! - தொகுதிகள் கண்ணோட்டம்

ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த அன்றைய செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. தற்போது பரப்பளவில் பெரியதாக இருந்த காஞ்சிபுரம் நிர்வாக வசதிக்காக, கடந்த 2019ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மீண்டும் தனி மாவட்டமானது. பல்லவர்களின் மாமல்லபுரம், நாயக்கர்களின் கோட்டை, மதுராந்தகம் ஏரி, விமானப் படைத்தளம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போன்றவை மாவட்டத்தின் அடையாளங்கள். தமிழ்நாட்டின் வட கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ள செங்கல்பட்டின் வடக்கில் சென்னை, மேற்கில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தெற்கில் விழுப்புரம் மாவட்டங்களும், கிழக்கில் வங்காள விரிகுடா கடலும் அமைந்துள்ளன. மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயம், மீன்பிடிப்பு, தொழிற்சாலைகள்.

chengalpet district watch
செங்கல்பட்டு தொகுதிகள் உலா
author img

By

Published : Mar 14, 2021, 4:34 PM IST

Updated : Mar 14, 2021, 4:47 PM IST

வாசல்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய பொதுத் தொகுதிகள், செய்யூர், மதுராந்தகம் ஆகிய தனித் தொகுதிகள் என, ஏழு தொகுதிகளைக் கொண்டுள்ளது.

தொகுதிகள் வலம்:

சோழிங்கநல்லூர்: தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர். கிழக்கு கடற்கரைச் சாலை, ஓஎம்ஆர்(பழைய மாமல்லபுரம் சாலை) சாலைகளில் அமைந்துள்ள ஐடி நிறுவனங்கள், பண்ணை வீடுகள், பொழுதுபோக்கு மையங்கள் தொகுதியின் அடையாளங்களுள் சில. ஆசியாவின் மிகப்பெரிய சதுப்பு நிலமான பள்ளிக்கரணை, அரசு மற்றும் தனியார் ஆக்கிரமிப்புகளால் சுரண்டப்பட்டு வருகின்றது.

சென்னை பகுதிகளின் நிலத்தடி நீரின் நுரையீரலான இந்த சதுப்பு நிலத்தைப் பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என்பது தொகுதி மக்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகவுள்ளது. சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்டாலும், அதற்கான வசதிகள் எதுவும் தொகுதியில் இல்லை. போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணப்பட வேண்டும், பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதும், தொகுதி வாசிகளின் கோரிக்கைகளாக உள்ளன.

செங்கல்பட்டு தொகுதிகள் உலா: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும், களநிலவரமும்...!

பல்லாவரம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்தாலும், சென்னையின் பகுதியாகவே இத்தொகுதி கருதப்படுகிறது. பல்லாவரம், பம்மல் பகுதிகளில் வர்த்தகம், தொழில் நிறுவனங்கள் அதிகம். இந்தத் தொகுதியில் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு, பாதாள சாக்கடை பிரச்னை, போக்குவரத்து நெரிசல் போன்றவை தீராதப் பிரச்னையாகவுள்ளன. திருநீர்மலை, திரிசூலம் பகுதிகளிலுள்ள கல் அரவை ஆலைகளால்(கிரஷ்சர்) உண்டாகும் தூசியாலும், தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகின்றன.

தாம்பரம்: பழமையான சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம், மெப்ஸ் தொழிற்சாலை போன்றவைத் தொகுதியின் அடையாளங்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் வந்து செல்லும் சென்னை நகரின் நுழைவு வாயிலாக இருக்கும் தாம்பரத்தில், அனைத்து பகுதிக்கும் செல்லும் வகையில் முறையான நிரந்தர பேருந்து நிலையம் இல்லை என்பது பெருங்குறையாக உள்ளது.

முறையான பேருந்து நிலையம் இல்லாததால், பேருந்துகள் ஜிஎஸ்டி சாலையில் நின்று செல்கின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும். தொகுதிக்குள் பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு காணப்பட வேண்டும்; தாம்பரத்தில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரி தரம் உயர்த்தப்பட வேண்டும்.

செங்கல்பட்டு: மாவட்டத்தின் தலைநகரின் பெயரில் உள்ள இந்தத் தொகுதியின் பிரதான தொழில் விவசாயமும், மீன்பிடிப்பும். இத்தொகுதி வழியாக பாலாறு பாய்ந்து கடலில் கலக்கிறது. தொகுதிக்குட்பட்ட மறைமலை நகர் பகுதி சிப்காட்டில் கார் தொழிற்சாலையும், மஹிந்திரா சிட்டியில் அமைந்துள்ள தொழில் வளாகமும் இங்கு அமைந்துள்ளன.

நகருக்குள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல்களுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். மாவட்டத்தின் தலைநகரான இங்குள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்பன முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.

திருப்போரூர்: புகழ்பெற்ற திருப்போரூர் கந்தசாமி கோயில் இத்தொகுதியிலேயே உள்ளது. அதிக மக்கள் வந்து செல்லும் இங்கு வாகன நிறுத்தம் ஏற்படுத்தாதது பெரும் குறையாகும். தொகுதிக்குட்பட்ட மீனவ கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. அவர்களின் நீண்டகால கோரிக்கையான தூண்டில் வளைவு, மீன் இறங்குதளம் அமைக்கப்படவில்லை.

இத்தொகுதியில் உள்ள மக்கள் மருத்துவ சிகிச்சைகளுக்காகச் செங்கல்பட்டிற்கே செல்ல வேண்டியுள்ளது. சர்வதேச சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் பேருந்து நிலையம் ஏற்படுத்த வேண்டும்; தொகுதியில் பல்நோக்கு மருத்துவமனை ஏற்படுத்த வேண்டும் என்பதும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

செய்யூர் (தனி): மாவட்டத்தின் தனித் தொகுதியில் ஒன்று செய்யூர். கிழக்கு கடற்கரைப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களை உள்ளடக்கிய தொகுதி. விவசாயம், மீன்பிடிப்பு, பனை தொழில் உள்ளிட்டவை இத்தொகுதியில் நடைபெறுகின்றன. பொருளாதாரம், தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய தொகுதியும் கூட. மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட வேண்டும்.

பனை தொழிலையும், தொழிலாளர்களையும் காக்கும் வகையில் பனை வாரியம் அமைக்க வேண்டும், இங்குள்ள உப்பளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பன இத்தொகுதி மக்களின் பிரதான, நீண்ட கால கோரிக்கையாகும். இங்கு அரசு கலைக்கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்பது கனவாகவே உள்ளது.

மதுராந்தகம் (தனி): மாவட்டத்தின் பெரிய, புகழ்பெற்ற மதுராந்தகம் ஏரி இந்தத் தொகுதியில் தான் உள்ளது. இந்த ஏரியை தூர்வார வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை ஏற்கப்பட்டு, அந்த பணிக்காக, ரூ.120 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அப்பணியை விரைவாக முடிக்க வேண்டும். இங்குள்ள அரசு மருத்துவமனையை சீரமைக்க வேண்டும். தொகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்பன தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளாகும்.

களநிலவரம் :

ஏரிகளின் மாவட்டம் என அறியப்படும் செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரும்பாலான ஊராட்சிகளில் சிறிய, பெரிய ஏரிகள் உள்ளன. புதிதாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த மாவட்டத்திலும் பேருந்து நிலையம், மருத்துவமனை, பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றுதல் போன்ற அடிப்படைத் தேவைகள் உள்ளன.

பிரதான பிரச்னையாக நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைத்தல், நீர்நிலைகளைப் பராமரித்தல், உப்பள, பனைத் தொழில்களைப் பாதுகாத்தல் போன்ற பிரச்னைகளும் உள்ளன. காஞ்சிபுரத்திலிருந்து பிரிந்த செங்கல்பட்டு மாவட்டத்தின் ஏழு தொகுதிகளையும், தன் வசப்படுத்தியுள்ளது திமுக. மாவட்டத்தில் இருந்த ஒரு தொகுதியையும் இடைத்தேர்தலில் அதிமுக இழந்து விட்டது.

தனி மாவட்டமாக அறிவித்த விஷயம் மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தினாலும், வேட்பாளர் அறிவிப்பில் அதிமுக செய்திருக்கும் குளறுபடி தொகுதிவாசிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தாலும், அனைத்து தொகுதிகளையும் தன்வசம் வைத்திருக்கும் தைரியத்தில் களம் காண்கிறது திமுக. தனித் தொகுதிகளை கூட்டணியினருக்கு விட்டுக் கொடுத்தது அநாவசியம் என்றாலும், பந்தயத்தில் திமுவின் கையே ஓங்கியிருக்கிறது.

Last Updated : Mar 14, 2021, 4:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.