கரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருவதால், அதற்கான பரிசோதனை மையங்களும் அதிக அளவில் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அந்தந்த மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளை கரோனா பரிசோதனை மையமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 240 படுக்கை வசதிகளும், 55 செயற்கை சுவாச கருவிகளுடன் கூடிய படுக்கை வசதிகளும் உள்ளன. ஆனால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்படுபவரின் இரத்த மாதிரிகளை ஆய்வு செய்வதற்கு, சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்து வந்தனர்.
இதனையடுத்து தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதை, விரைவாக கண்டறிய செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி கரோனா பரிசோதனை மையமாக மாற்றப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
இதையும் படிங்க...பல ஆண்டுகளாக அக்கறையில்லாமல் இருக்கும் அரசு... சொந்த செலவில் சாலை அமைத்த கிராமம்...!